Resolution at the mdmk General Committee Meeting

Advertisment

மதிமுகவின் 28ஆவது பொதுக்குழுக் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று கூடியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தமிழக அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், இன்றைய கூட்டத்தில் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கும் பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது. துரை வையாபுரிக்கு பொறுப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், இந்த ஒப்புதலானது வழங்கப்பட்டது.

அத்தோடு, கட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தையும் பொதுக்குழு வைகோவுக்கு வழங்கியது.