Advertisment

“சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் இட ஒதுக்கீட்டை 100% ஆக மாற்ற வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

“Reservation should be made 100% through caste census”- Anbumani

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் துவங்குவதற்கு முன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது பேசிய அவர், “சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி 100 விழுக்காடு இடங்களையும்அனைத்து சமூகத்திற்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டை100 விழுக்காடாகஆக்க வேண்டும். இப்பொழுது 69 விழுக்காடு இருக்கிறது. 100% ஆக மாற்றி சமுதாயம் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும்.

Advertisment

கஞ்சா மற்றும் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் 20000 காவலர்களைகூடுதலாகபணியில் அமர்த்தி கண்காணிப்புப் பணிகளைத்தீவிரப்படுத்த வேண்டும்.

நீர் மேலாண்மைத்திட்டத்திற்கு ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டால்தான் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படாது. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளை ஏற்படுத்தினால் கடலில் கலக்கும் காவிரி நீரில் 50 டிஎம்சி நீரை சேமிக்கலாம்.

தமிழகத்தில் புதிதாக துவங்கப்படும் தொழில் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பினை தமிழர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்” எனக் கூறினார்.

pmk anbumani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe