Advertisment

ஓ.பி.சி.க்கு இடஒதுகீடு; அரசியல் சாசன பிரிவு 16-ஐ திருத்த வேண்டும் - ஒன்றிய அரசுக்கு வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

'Reservation for OPC; Article 16 of the Constitution should be amended' - Wilson MP

பதவி உயர்வில் ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக அரசியல் சாசன பிரிவு 16-ல் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் ஒன்றிய சட்டத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

பி.வில்சன் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், 'உண்மையான சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், நிர்வாகத்தில் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காகவும், பதவி உயர்வுகளில் ஓ.பி.சி பிரிவினருக்கு சீனியாரிட்டியுடன் கூடிய இடஒதுக்கீடுகள் வழங்குவதற்கு ஏதுவாகஅரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஏனெனில், ஏற்கனவே அரசியலமைப்பு பிரிவு 16 (4A) மற்றும் 16 (4B) ஆகியவை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது. ஆனால், ஓ.பி.சி பிரிவினருக்கு அவ்வாறு இல்லை.இதனால் சமூகத்தில் பின் தங்கியுள்ள இந்த பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

Advertisment

எனவே, ஓ.பி.சி பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக அரசியலமைப்பு பிரிவு 16-ல்திருத்தம் கொண்டு வரவேண்டும்' என்று பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

wilson parliment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe