Skip to main content

வன்னிய சமுதாயத்தினரின் முக்கிய கோரிக்கை பரிசீலனை... எடப்பாடி பழனிசாமி

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் எனும் சிவ சிதம்பர இராமசாமி படையாட்சி இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதி போராளியும் ஆவார். 1951-ல் ‘வன்னிய குல சத்திரிய சங்கம்’ மாநாட்டைக் கூட்டி வன்னியர்களுக்காக  மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றார். ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாட்டால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த எம்.ஏ.மாணிக்கவேலு நாயக்கர்  ‘காமன்வீல் கட்சி’யினை தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம்  மாவட்ட வன்னியர்கள் இராமசாமி படையாட்சியின் தலைமையில் ‘தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி’ என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர்.

இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. அத்தேர்தலில் தி.மு.க நேரடியாகப் போட்டியிடவில்லை, மாறாக ‘திராவிட நாடு’ கோரிக்கையை  சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்த கட்சிகளுக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று. 

அந்த தேர்தலில் இராமசாமி படையாட்சி உட்பட 19 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவைக்கான தேர்தலில் 4 இடங்களில் வென்றனர்.  ஆனால் தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லை. தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு  கொடுக்கப்பட்டு  சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சி கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம் பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட  கட்சிகளுள் ஒன்று தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி. அப்போது ஆங்கிலேயர் காலத்தில் வன்னிய சமூகம், குற்றப் பரம்பரை என்ற பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. அந்த நிலையை நீக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் ராஜாஜி அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார்.
 

Requests from vanniyar community will be considered says edappadi palanisamy


1954-ல் காமராஜர் முதல்வரான பின்னர் இராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். அதையடுத்து 1954-ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். 1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது  காங்கிரசிலிருந்து விலகிய இராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திரா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட அக்கட்சியின் அனைத்து  வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். சிறிது காலத்துக்குப் பின்னர்  இராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து விட்டார். 1980, 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் சார்பாக திண்டிவனம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992-ல் மரணமடைந்தார்.

விடுதலை போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்க காரணமாக இருந்தவருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின்  உருவப்படம் சட்டப்பேரவையில் திறந்து வைக்கப்பட்டது. செப்டம்பர் 16 அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு அவர் பிறந்த ஊரான கடலூரில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.15 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் நினைவு மணி மண்டபம், முழு உருவ வெண்கல சிலை மற்றும் நூலகம் நிறுவப்பட்டுள்ளது.
 

Requests from vanniyar community will be considered says edappadi palanisamy


அதன் திறப்பு விழா துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. தலைமைச்செயலாளர் சண்முகம் வரவேற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவரும், ஓ.பன்னீர்செல்வமும் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் முழுஉருவ சிலைக்கும், உருவபடத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் இருவரும் மணிமண்டப வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.

பின்னர் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்தியா வலிமையான, வளமான நாடாக திகழ்கிறது என்றால் அந்த வலிமைக்கு வேர்களாக விளங்கியவர்கள் விடுதலைக்காக போராடிய வீர மறவர்கள்களின் தியாகங்கள் தான். அத்தகைய விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நாடு விடுதலை பெற அரும்பாடு பட்டவர்களில் ராமசாமி படையாட்சியாரும் ஒருவர். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனினும் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டவர். நகைச்சுவையாகவும், தன்னுடைய கருத்தை ஆணித்தரமாகவும் எடுத்து கூறக்கூடியவர். அதேசமயம் தன்மானத்தை விட்டு கொடுக்காமல் துணிச்சலாக  பேசுபவர். சொன்னதை செய்தார். செய்ய முடியும் என்பதை மட்டுமே சொன்னார். கடலூரில் ரெயில்வே இருப்பு  பாதை அமைக்கவும், பேருந்து நிலையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியன அமைப்பதற்காக  தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கியவர்.  வன்னியர் சமுதாய  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஓராசிரியர் வேலை என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அவரது சீரிய பணிகளை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறோம். சட்டமன்றத்தில் அவரது முழுஉருவ படம் என்னால் திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர்கள், வன்னியர் சமுதாய தலைவர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க அவர் பிறந்த கடலூரில் மணி மண்டபமும், அதில் அவரது முழுஉருவ சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. பா.ம.க நிறுவனர் இராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸ், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் வன்னிய சமுதாயம் தொடர்பாக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அது பரிசீலனையில் உள்ளது.
 

Requests from vanniyar community will be considered says edappadi palanisamy


தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து பாதுகாத்திட ஜெயலலிதா, 1993-ஆம் ஆண்டு சட்டமேற்றி அரசியலமைப்பு சட்டத்தில் 9-ஆவது அட்டவணையில் சேர்த்து அரசிதழில் பாதுகாப்பு பெற்று தந்தார்.  சமூக நீதிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து, அதனை களைய உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது அ.தி.மு.க அரசு. வாக்குறுதிகளை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றும் ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி” என்றார்.

விழாவில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ ஓ.எஸ்.மணியன், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இராமசாமி படையாட்சியாரின் மகன் எஸ்.எஸ்.இராமதாஸ் நன்றி கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.