Advertisment
சென்னை தீவுத் திடல், சத்தியவாணி முத்துநகர் மற்றும் காந்தி நகர் மக்களுக்கு கே.பி.பார்க்கில் உள்ள 1,056 குடியிருப்புகளில் வீடு ஒதுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், திருமுருகன் காந்தி, ஜி.செல்வா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.