Skip to main content

“இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான அறிக்கை சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்” - சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு 

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

Report on Hindi protest to be discussed in assembly” Assembly Speaker Appavu

 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முதல் நாளான இன்று காலையில் சரியாக 10 மணிக்கு கூடிய சட்டமன்றத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மேலும் முலாயம் சிங் யாதவ் உட்பட 7 தலைவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

 

இதனையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாள் அலுவல்கள் நிறைவு பெற்றதை அடுத்து சபாநாயகர் அப்பாவு நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

 

இதன் பின் சட்டப்பேரவைத் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பல தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இன்றைய கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு மீண்டும் கூட்டம் துவங்கும். அதில் கூடுதல் வரவு செலவு திட்டத்தினை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அதனைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான அறிக்கை சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்படும். நாளை மற்றும் நாளை மறுநாள் முழுமையாக சட்டமன்றம் நடைபெறும்.

 

இரு அறிக்கைகள் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை இரண்டும் நாளை சட்டமன்றத்தில் வைக்கப்படும். 

 

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து நான்கு கடிதங்களும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து இரு கடிதங்களும் தரப்பட்டுள்ளன. பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு வராததற்கு காரணம் அதிமுக கழகத்தின் பொன்விழா ஆண்டினை கொண்டாடுவதால் இருக்கலாம் என கேள்விப்பட்டேன். நாளை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனக்கு மூன்று முறை அழைப்பு வந்தது..” - சபாநாயகர் அப்பாவு

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

“I got a call three times..” - Speaker Appavu

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, “அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட ஒன்றிய அரசின் நிறுவனங்கள், ஒன்றிய அரசின் மனநிலையை புரிந்துகொண்டு பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர்களை குறிவைத்து அவர்களுக்கு எல்லாம் முதலில் நூல் விடுவது. நூல் விடுவது என்றால், ‘உங்கள் மீது இப்படி எல்லாம் பிரச்சனை இருக்கு. எனக்கு வேண்டிய ஆளு எனக் கூறி, நான் அவ்வாறு அவர்களை சமாதானம் செய்து வைத்திருக்கிறேன். உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என சொல்லி வைத்திருக்கிறேன்’ என ஒவ்வொன்றாக பேசுவதற்கு, அவர்களுக்கு இடைத் தரகர்களாக பல பேரை வைத்துள்ளனர். 

 

குறிப்பா அமலாக்கத்துறையில் இதுபோல் இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு, எதிர்த்தரப்பிடம் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிவிடுவது. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பார்த்து இது நமக்கு தெரியவருகிறது. 

 

இதுபோல், எல்லோருக்கும் முதலில் அன்பாக பேசுவது, பிறகு கொஞ்சம் குரலை உயர்த்தி சிறு மிரட்டல் விடுவது, அதற்கடுத்து சமாதானமாக பேசுவோம் என்பார்கள். இதற்கெல்லாம் பணியவில்லை என்றால் அவருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். இப்படிப்பட்ட செயல்கள்தான் நடப்பதாக பலரும் சொல்கிறார்கள். 

 

என்னிடமும் கடந்த மூன்று மாதங்களாக இதுபோல் மூவர் பேசினார்கள். மூன்றாவது முறை ஒருவர் என்னிடம் பேசும்போது, ‘தம்பி எங்கிட்ட இந்த வேலையெல்லாம் வேண்டாம். நான் சரியாக இருக்கிறேன். மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார். நான் வெறும் விவசாயம் மட்டும்தான் செய்கிறேன். என்னையே இப்படி மிரட்டுகிறீர்கள் என்றால், இதைத்தானே எல்லாருக்கும் செய்வீர்கள்’ என்றேன். எனவே, என் அனுபவப் பூர்வமாக தெரிந்து இதனை சொல்கிறேன்” என்று தெரிவித்தார். 

 

 

Next Story

யார் முதலில்... போட்டி போட்ட அமைச்சரும் சபாநாயகரும்!!

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

tirunelveli welcome ceromy minister nehru speaker appavu 

 

திருநெல்வேலியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் யார் முதலில் பொன்னாடை போர்த்துவது என அமைச்சரும் சபாநாயகரும் போட்டி போட்டுக் கொண்ட சம்பவம் அங்கிருந்த தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் பங்கேற்பதற்காக நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு திருநெல்வேலி சென்றிருந்தார். அப்போது தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு திமுக தொண்டர்களுடன் வரவேற்றார். இந்நிலையில் அமைச்சர் நேரு காரில் இருந்து இறங்கியவுடன் பொன்னாடை போர்த்துவதற்கு சபாநாயகர் முயற்சித்தார். உடனே அமைச்சர் நேரு சபாநாயகர் அப்பாவுவின் கையை பிடித்து பொன்னாடையை சபாநாயகருக்கு போட முயன்றார். ஆனால் சபாநாயகர் அதனை ஏற்காமல் அமைச்சருக்கு பொன்னாடை போட முயன்றார். இறுதியில் அமைச்சர் நேரு சபாநாயகர் அப்பாவுக்கு பொன்னாடையை போர்த்தினார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அமைச்சருக்கு பொன்னாடையை போர்த்தினார். இந்த செயலானது அங்கு இருந்த திமுக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.