Advertisment

ஐந்து மாநில தேர்தல்: சர்வே டீம் கொடுத்த ரிப்போட்..! வியூகத்தை மாற்றிய பாஜக!

Report given by the survey team ..! The BJP turned the strategy in a different direction!

உ.பி., பஞ்சாப், கோவா, உத்ரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றது. இந்தியா முழுக்க உ.பி. தேர்தலின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். காரணம், உ.பி.யில் ஆட்சி அமைக்கும் கட்சி அடுத்து நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான இடங்களை வெல்லும் அதன்மூலம் ஆட்சி அமைப்பது அல்லது ஆட்சி அமைக்கும் கட்சியின் கூட்டணியில் முக்கியப் பங்கு வகிக்கமுடியும்.

Advertisment

இந்நிலையில், ஐந்து மாநில தேர்தல் குறித்து அரசியல் விமர்சகர்களிடம் விசாரித்த போது, “ஹிஜாப் பிரச்சனை பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பியுள்ள சூழலில் தேர்தல் களத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான தகிப்பு அதிகம் தெரிகிறது. அதனால் காங்கிரஸ் தரப்பு நம்பிக்கையோடு இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு நடந்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், உ.பி.யின் முதலமைச்சர் வேட்பாளராக பிரியங்காவை அறிவித்தால் உ.பி.யைப் பிடித்து விடலாம் என ஒரு யோசனை முன் வைக்கப்பட்டது. ஆனால், பிரியங்காவை அறிவித்து அவர் தோற்றுப் போனால், நேரு குடும்ப வாரிசுகளுக்கு செல்வாக்கில்லை என பேச்சு வரும் என்று சோனியா அதை மறுத்துவிட்டார். ஆனால், இப்போது உ.பி. பிரச்சாரத்தில் பிரியங்காவிற்குத் திரளும் பெண்களின் கூட்டத்தையும், தற்போதைய ஹிஜாப் பிரச்சனையையும் பார்க்கும்போது பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிச்சிருக்கலாமே என்று சோனியா ஆதங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அதேபோல், கட்சியின் சீனியர்களோ, இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகவில்லை. இப்பவே அறிவியுங்கள் என்று சோனியாவை வற்புறுத்துகிறார்கள் என்றும் சொல்கின்றனர்.

Advertisment

மேலும், உ.பி. உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றியை பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரஸ்டீஜ் இஷ்யூவா பார்ப்பதாக சொல்கிறார்கள். அதிலும், குறிப்பாக, உ.பி.யில் ஆட்சியை இழந்து விடக்கூடாது என நினைக்கிறார்கள். இதற்கு காரணம், உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது என்று மத்திய உளவுத்துறையும், மோடி - அமீத்ஷா - ஜே.பி.நட்டா ஆகிய மூவர் கூட்டணி உருவாக்கிய சர்வே டீமும், அவர்களிடம் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.

அதனால் இந்துக்களின் வாக்குகளை முழுமையாகக் கைப்பற்றத்தான் ஹிஜாப் பிரச்சனை உளவுத்துறை மூலம் வெடிக்க வைக்கப்பட்டிருக்கிறதுஎன்று மக்கள் மத்தியில் பேசப்படுவதாக சொல்கிறார்கள் டெல்லி அரசியலை அறிந்தவர்கள். பொதுவாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடைசி நேரத்தில் நாட்டுப் பற்றை உருவாக்க பாகிஸ்தானுக்கு எதிராகக் குண்டு சத்தத்தை ஏற்படுத்துவார்கள். இப்போது அதைச் செய்ய முடியாது என்பதால், உள்ளூரில் மதப் பிரச்சனையை கிளப்புறாங்க என்றும் பேசுவதாக டெல்லி வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.

Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe