தமிழகத்தில் கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அரசு அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ என்று பொறிக்கப்பட்ட பலகை அமைக்கப்பட்டது. அதன்பின் ஆட்சி மாற்றத்தின் போது பெரும்பாலான அலுவலகங்களில் அந்த பலகைகள் அகற்றப்பட்டது சர்சையை ஏற்படுத்தியது.
அதே போல் அந்த சமயத்தில் சென்னை ரிப்பன் மாளிகையிலும் அகற்றப்பட்டது. அதன் பின்னர் தற்போது திமுக ஆட்சி நடைபெறுகிற நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞரின்பிறந்தநாளான இன்று (3.06.2021) சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அகற்றப்பட்ட ‘தமிழ் வாழ்க’ பலகை மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.