/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jp-nadda-art_2.jpg)
இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
இதனால் ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
இந்நிலையில் இலாக்கா ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. முக்கிய இலாகாக்களை தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கோரும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக ஜெ.பி.நட்டா, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)