Advertisment

லால்குடி தொகுதி தமாகாவுக்கு சென்றது எப்படி? - பின்னணி தகவல்கள்!

லால்குடி தொகுதி தமாகாவுக்கு சென்றது எப்படி? - பின்னணி தகவல்கள்!

Advertisment

நேற்று மாலை, அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு சில வேட்பாளர்களை மாற்ற வேண்டும் எனவலியுறுத்தி அதிமுகவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில்ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒரு பகுதியாக, துறையூர் தொகுதிவேட்பாளராகஅறிவிக்கப்பட்டுள்ள இந்திராகாந்தி, லால்குடி தொகுதிவேட்பாளராகஅறிவிக்கப்பட்டிருந்த ராஜாராம் ஆகியவேட்பாளர்களைமாற்றக் கோரிஅதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், அதிமுக தலைமை இன்று லால்குடி வேட்பாளர் ராஜாராமைநீக்கிவிட்டு, அந்த தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குஒதுக்கீடு செய்தது.

தற்போது, அந்த லால்குடி தொகுதிக்கு அருகாமையில் உள்ள 'நகர்' என்ற பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்,வேட்பாளராக அறிவிக்கப்படஉள்ளார். பஸ் ட்ரான்ஸ்போர்ட் வைத்து நடத்திவரும்இவர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின்மிக நெருங்கிய நண்பர் என்பதால், இந்தத் தொகுதி, அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

admk gk vasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe