Advertisment

'காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க இதுவே காரணம்'-ப.சிதம்பரம் கருத்து 

This is the reason for allocating less seats to the Congress - P. Chidambaram

Advertisment

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பல நாட்களாக திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் பல்வேறு கட்டங்களாக தனித்தனியே காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு,கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உள்ளிட்ட 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தற்போது கையெழுத்தாகி உள்ளது.

This is the reason for allocating less seats to the Congress - P. Chidambaram

இந்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சீட் குறைக்கப்பட்டுள்ளதற்குகாங்கிரஸ் கட்சியின் தவறே காரணம் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் 60 சீட் தந்தும் சில இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் வாய்ப்பை வைத்துதான் கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்குவதை கணிப்பார்கள் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

tn assembly election 2021 congress P chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe