/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/77_50.jpg)
தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17 துவங்கி 19ம் தேதி வரை நடைபெற்றது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓபிஎஸ் முதல்வரிடம் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டனர். அதில், நேற்று உங்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் சபாநாயகருக்கு எதிரான போராட்டம் நடத்தினர். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீகள் என்ற செய்தியளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ் “எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை” என கூறினார்.
நீங்கள் முதலமைச்சரோடு ஒரு மணிநேரம் பேசியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்துகிறாரே என்று செய்தியாளர்கள் கேட்கையில், “என்னுடன் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்றே இது குறித்து பேசி சவால் விட்டுள்ளனர். யாருக்கு பழனிசாமிக்கு. நான் தமிழக முதல்வரை சந்தித்ததை பழனிசாமி நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்து விலகத் தயார். நிரூபிக்கவில்லை என்றால் அவர் விலகத் தயாரா? எனக் கேட்டுள்ளார்கள்” என்றுகூறிச் சென்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)