/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rbudhayani.jpg)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (25.10.2024) மதியத்தில் இருந்து பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இரண்டு நாள் மழைக்கே மதுரை தத்தளிக்கிறது. மதுரையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது அரசின் தோல்வி. மக்களின் பொதுவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எத்தனை மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற தெளிவான தகவல் இல்லை” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)