'ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும்'-சட்டப்பேரவை செயலாளருக்கு இபிஎஸ் கடிதம்

 'RB Udayakumar should be allowed' - IPS letter to Legislative Secretary

ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து கடந்த ஆறு மாதங்களில் அ.தி.மு.க.க்குள் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இதனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அத்துடன், கட்சியின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கி அதற்கான கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். மேலும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

வரும் அக்டோபர் 17- ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் கூடுகிறது. அ.தி.மு.க. சார்ந்த எந்த முடிவை எடுத்தாலும் தம்மிடம் கலந்தாலோசிக்க வேண்டும் எனக் கோரி சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், தற்பொழுது எடப்பாடி பழனிசாமி சார்பாக சட்டப்பேரவைசெயலாளருக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில் 'அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாரை சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி சட்டப்பேரவை செயலாளரிடம் கொடுத்துள்ளார்.

admk speaker
இதையும் படியுங்கள்
Subscribe