Ravikumar MP Tweet about PM Cares PSA Plant

Advertisment

பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு உள்பட 35 மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அக்.07 காலை உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

Ravikumar MP Tweet about PM Cares PSA Plant

தமிழ்நாட்டில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1.84 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆலையை பிரதமர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

அதேபோல், தேனி, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும் திறக்கப்பட்டன. இதில், மதுரை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை எம்.பி. ரவிகுமார் திறந்துவைத்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திறந்து வைத்த கொள்கலன்களில் பி.எம். கேர் நிதி கீழே ஒன்றிய அரசு என்றிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் பி.எம். கேர்ஸ்-க்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. திறந்துவைத்த எங்களுக்கும் குழப்பமாகவே இருக்கிறது. இது யாருடைய நிதி? விளக்கம் தருமா ஒன்றிய அரசு?” என்று பதிவிட்டுள்ளார்.