திமுக தலைவர் கலைஞர் தந்தை முத்துவேலர் சிறந்த கவிஞராக திகழ்ந்திருக்கிறார். அந்த காலத்திலேயே இரண்டு தங்க பட்டைகளை பொருத்திக் கொண்ட கலைஞராக திகழ்ந்திருக்கிறார். தனது சொந்த ஊரான திருக்குவளையில் வசித்தாலும், அருகில் இருந்த பெருநகரமான திருவாரூரில் இருந்த கமலாம்பிகா கூட்டுறவு வங்கியில் 5 ஷேர்களை வாங்கியிருந்தார் என்பதை அவரது திட்டமிட்ட வாழ்க்கைக்கு உதாரணமாகும். இதுதொடர்பாக அவர் அந்த வங்கியின் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதம் இதோ:-

Advertisment

kalaignar

திருவாரூர்.

16.1.46

திருவாரூர் கமலாம்பிகா கோவாப்பிரேட்டிவ் அர்பன் பேங்க் செகரட்டரி அவர்களுக்கு. நம்பர் 3762 அ.முத்துவேல்பிள்ளை எழுதிக்கொண்டது.

இப்பவும் எனக்கு வயது 70-க்குமேல் அதிகமாகி நடக்கமுடியாமல் பலஹீனமாக இருக்கிறபடியாலும், கண்பார்வை மங்கலாயிருப்பதினாலும் பாங்கில் வரவுசெலவை வைத்துகொள்ள செளக்கியமில்லாததினால் எனக்கு பாங்கில் இருக்கும் 5 ஷேர்களையும் எனக்கு வாரிசாக உள்ள என்மகன் கருணாநிதியின் பெயரில் மாற்றிக்கொடுக்கக் கேட்டுக்கொள்கிறேன். நான் தற்போது எனது கிராமத்தில் வசித்து வருகிறேன்.

இப்படிக்கு,

முத்துவேல்

Advertisment

இதை ’இனிய உதயத்தில்’ பிரசுரித்துவிட்டு, ஒருவாரம் தாமதமாக கவிக்கோ அவர்களுடன், அந்த இதழை எடுத்துக்கொண்டு, கலைஞருக்கு சர்ப்ரைஸாக இருக்கும் என்ற எண்ணத்தோடு கோபாலபுரம் சென்றோம்.எங்களைப் பார்த்தவுடனே.. ’பார்த்துட்டேன்’ என்று பூரிப்போடு சிரித்தார். அதில் நெகிழ்ச்சியும் தெரிந்தது.