Advertisment

சும்மாவே ஆடுபவருக்குச் சலங்கை கட்டிவிட்டால்‌... கமலை விமர்சித்த பாண்டே... பதிலடி கொடுத்த நடிகை ஸ்ரீப்ரியா!

மோடி கேட்டுக் கொண்டபடி, பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் விளக்கேற்றிய நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் அதற்கு நேர்மாறாக இருந்தது. "நீங்கள் சொன்னதைக் கேட்க இத்தனைக் கோடி மக்கள் இருக்கின்றனர். தற்போது இதுபோன்ற தலைவர் உலகத்தில் எங்கும் இருக்க வாய்க்கவில்லை என்று அந்தக் கடிதத்தில் சொல்லியிருக்கும் கமல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி, கரோனாவுக்கு எதிராகப் பால்கனியில் கைதட்டுவது, விளக்கு ஏற்றுவது உள்பட எதுவும் அடித்தட்டு மக்களுக்குப் பலன் தராது" என்று காட்டமாக எழுதியிருந்தார்.

Advertisment

Advertisment

mnm

இதனையடுத்து நடிகர் கமல் பிரதமர் மோடிக்கு கடிதம் நிலையில் பத்திரிகையாளர் பாண்டே விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில் பாண்டே கமலை விமர்சனம் செய்தததற்கு நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் 'தமிழராக இல்லாதபோதும்‌, தெளிவான தமிழில்‌, தனியார் தமிழ்‌ தொலைக்காட்சியின்‌ நெறியாளராக… உங்கள்‌ மீது எனக்கு மரியாதை அதிகம்‌. இப்படித் தான்‌ நானும்‌ இந்தக் கடிதத்தை துவங்கியிருக்க வேண்டும்… உண்மையில்‌ எப்போதும்‌ உங்கள்‌ மீது எனக்கு கோபம்‌ உண்டு… கேள்வி கேட்கும்‌ இடத்தில்‌ அமர்ந்திருப்பவர்‌ தான்‌ அறிவாளி, பதில்‌ சொல்லும்‌ இடத்தில்‌ அமர்ந்திருப்பவர்‌ அறிவற்றவன்‌ போல்‌, கேள்வியைக் கேட்டுவிட்டு பதில்‌ சொல்ல விடாமல்‌ தொடர்ந்து இடைமறிக்கும்‌ பண்பைப் புழக்கத்தில்‌ கொண்டுவந்தவர்‌ நீங்கள்‌ என்பதால்‌! கேள்வி கேட்பவர்‌ புத்திசாலி என்றால்‌ பதில்‌ சொல்ல அமர்ந்திருப்பவரும்‌ புத்திசாலி என்று மதிப்பவன்‌ தான்‌ உண்மையான அறிவாளி! சரி…

http://onelink.to/nknapp

நம்‌ பாரத பிரதமருக்கு எம்‌ தலைவர்‌ எழுதிய கடிதத்திற்கு உங்கள்‌ விமர்சனம்‌ பார்த்தேன்‌. நீங்கள்‌ பேசிக்கொண்டிருக்கும்‌ போது இடை மறிக்கவோ தடை விதிக்கவோ யாரும்‌ இல்லாதது உங்களுக்கு மிக செளகரியம்‌… சும்மாவே ஆடுபவருக்குச் சலங்கை கட்டிவிட்டால்‌? ஜனக்‌ ஜனக்‌ பாயல்‌ பாஜே தான்‌… மூச்சு விடாமல்‌ பேசுகிறீர்கள்‌? பேட்‌ பண்ண ஆள்‌ இல்லாத போது பால்‌ போட்டுவிட்டு அவுட் என்று கத்துவது போல்‌ உள்ளது… உங்களுக்கு எப்போதுமே நீங்கள்‌ சொல்வது மட்டுமே உண்மை என்ற ஒரு மனப்பான்மை… உங்கள்‌ புள்ளிவிவர கேள்விகளுக்குப் பலர்‌ பதில்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌, பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்‌! எனக்கு உங்களிடம்‌ சில கேள்விகளே…

சுனாமியைப்போல்‌ கரோனாவும்‌ ஓர்‌ காலையில் திடீரென்று தான்‌ நம்‌ நாட்டிற்குள்‌ வந்ததா? பிரதமர்‌ அவர்கள்‌ தமிழில்‌ வந்த கடிதத்தைத்தான்‌ படித்தாரா? (வாழ்க தமிழ்‌!) கமல் எந்தக் குடிசை வீட்டில்‌ வாழ்ந்தார்‌ என்று கேட்டிருக்கின்றீர்கள்‌. குடிசையில்‌ வாழ்கின்றவர்களின்‌ மனதில்‌ வாழ்கின்றார்‌. அந்த எளிய மக்களுக்காக குரல்‌ கொடுப்பார்‌… நாட்டிற்கு முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டிருக்கின்றீர்கள்‌.

அதற்கு விடை கிடைத்து விட்டால்‌ கரோனாவிற்குத் தீர்வு கிடைத்து விடும்‌ போலும்‌… 'அவர்‌ வீட்டில்‌ பால்கனி இல்லையா?' என்பது, அந்த மாதிரி பத்திரிகைகாரன்‌ நான்‌ இல்லை, இந்த மாதிரி பத்திரிகைகாரன்‌ நான்‌ இல்லை என்று நீங்களே பெருமைப்பட்டுக்கொள்வது வேடிக்கை!இதற்குப் பெயர்‌ தன்னடக்கமா? உங்கள்‌ கூற்றுப்படி உலக அதிசயத்தில்‌ ஒரு பத்திரிகையாளரான நீங்கள்‌ எப்படி கமா மற்றும்‌ முற்றுப்புள்ளி என்று எதுவும்‌ வைக்காது ஒரு பக்கமாகப் பேசினீர்கள்‌? அது பத்திரிகை தர்மமா? பக்கத்து நாட்டுக்காரன்‌ டிசம்பர்‌ மாதம்‌ 8-ஆம்‌ தேதி முதல்‌ பலரைக் கரோனா என்னும்‌ தொற்றில்‌ தொலைத்துக் கொண்டிருந்த தகவல்‌ நமக்குத் தாமதமாகத்தான்‌ வந்ததா? சரி இந்த தொற்றிற்கு கோவிட்‌-19 என்ற பெயர்‌ ஏன்‌ வந்தது சொல்லுங்கள்‌ பார்ப்போம்‌? உங்கள்‌ விமர்சனங்களுக்கு எனக்கும்‌ மூச்சை அடக்கி பதில்‌ வசனம்‌ பேசத்தெரியும்‌… எப்போதும்‌ நீங்களே கேள்வி கேட்டதாக இருக்கக்கூடாது… அது மட்டுமின்றி எனக்குக்கூலிக்கு மாரடிக்கத்தெரியாது… இனியாவது எதிரில்‌ மனிதரை அமர வைத்து, பின்‌ அவரைச் சாடுங்கள்‌! என்று குறிப்பிட்டுள்ளார்.

kamalhaasan MNM politics rangaraj pandey Speech sripriya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe