ஊடக விவாதங்களில் பங்கேற்பது குறித்து ராமசுப்பிரமணியம் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அதில், ''சில நல்ல பாஜக நண்பர்கள் "டி.வி. விவாதங்களில் பாஜக பங்கெடுத்துக் கொள்ளப் போவதில்லை. நீங்களும் பங்கேற்காதீர்கள்" என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.பல நிகழ்ச்சிகள் இருப்பதால் டிவி விவாதங்களில் கலந்து கொள்ளவது மிகவும் சிரமம்.

Advertisment

ramasubramanian

நேற்று இரவே ஒரு தொலைக்காட்சி அன்புடன் அழைத்ததை ஏற்க இயலவில்லை.நிற்க.சில நாட்களுக்கு முன் பாஜகவின் மிக முக்கிய தலைவர் நான் ஆரம்ப காலத்தில் கட்சிக்கு செய்த உதவிகளை உண்மையாக நினைவு கூர்ந்தார். மகிழ்ச்சி.

எந்த விளக்கமும் கேட்காமல் பர்மாவிலிருந்து என்னை கட்சியை விட்டு தமிழிசை நீக்கியது பற்றி எந்தத் தலைவராவது எந்தத் தொண்டராவது எதிர்ப்பு தெரிவித்தார்களா? பாஜக சார்பில் ஊடகங்களில் பங்கேற்கும் சிலர் மகிழ்ந்தனர். என்னை ஊடகப் பங்கேற்பாளர்கள் பட்டியலிலிருந்து தமிழிசை நீக்கிய பிறகு நான் பாஜக என்றே பேசவில்லை. இருப்பினும் கட்சி விரோதமாகப் பேசுகிறேன் என்று நீக்கினார்களாம்.

Advertisment

தற்போது என் மனதிற்கு எது சரியெனப் படுகிறதோ அதைப் பேசுகிறேன். எப்போது இயலுமோ அப்போது டிவி விவாதங்களில் பங்கு பெறுகிறேன். பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றேன்.

இரண்டு முக்கிய கட்சிகளிலிருந்து மிக முக்கியமானவர்கள் தங்கள் கட்சியில் இணைய வேண்டும், மிக நல்ல பொறுப்பு வழங்கப்படும் என்றார்கள். அன்புடன் மறுத்துவிட்டேன். எனக்கு எந்தக் கட்சியும் ஒத்துவராது.

என்னை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாஜக முடிவின் காரணமாக பங்கேற்ற வேண்டாம் என்று உண்மையான அன்பின் காரணமாக சிலர் கேட்டிருக்கலாம். ஆனால் பாஜகவைச் சேர்ந்த சிலரின் தூண்டுதலாலேயே மறைமுகமாக இப்படி விண்ணப்பங்கள் வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள் அல்ல நான்.

நான் ஆகஸ்ட் மாதத்திலும் பல முக்கிய வேலைகளில் ஈடுபட வேண்டும். செப்டம்பரில் மீண்டும் வெளி நாடு பயணம் இருக்கும். அக்டோபரிலும் வெளிநாட்டுப் பயணம் இருக்கும்.நேற்றிலிருந்து எனக்கு அறிவுரை சொன்னவர்களுக்காக விளக்கம் இது'' என குறிப்பிட்டுள்ளார்.