சமூக நீதிக்காக போராடியவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான எஸ்.எஸ். ராமசாமியாரின் படத்தை தமிழக சட்டப்பேரவையில் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நீண்ட வருடங்களாக தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர் வன்னியர் சமூகத் தலைவர்கள்.
இதே கோரிக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் வலியுறுத்தப்பட்டது. மேலும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ராமசாமி படையாட்சியாரின் படத்தை வைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில், வருகிற19- ந்தேதி , பேரவையில் படத்தை திறக்க ஒப்புதல் தந்துள்ளார் எடப்பாடி. இதனைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை பேரவை செயலர் சீனிவாசன் கவனித்து வருகிறார். தற்போது படத்திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருக்கிறது. முதல் அழைப்பிதழை , முதல்வர் எடப்பாடியை இன்று சந்தித்து வழங்கினார் சீனிவாசன்.
"தேர்தல் காலங்களில் வன்னியர் சமூகத்தின் ஆதரவை பெறும் முயற்சியாகவே இந்த நிகழ்விற்கு முதல்வர் ஒப்புக்கொண்டார்" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.