தி.மு.க கூட்டணி; ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு

Ramanathapuram Constituency Candidate Notification for DMK alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Ramanathapuram Constituency Candidate Notification for DMK alliance

இந்த நிலையில், தி.மு.க கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று (02-03-24) நடைபெற்றது. அந்த கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏணி சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ramanathapuram
இதையும் படியுங்கள்
Subscribe