Advertisment

அன்புமணியால் ரொம்ப அப்செட்டான ராமதாஸ்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. மேலும் பல கட்சிகளுக்கு தேர்தல் முடிவுகள் ரொம்பவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தைலாபுரத்தில் இருந்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தர்மபுரியில் இருந்த அன்புமணியிடம் அடிக்கடி நிலவரத்தை விசாரிச்சிக்கிட்டே இருந்தார். அங்கே ஏறி ஏறி இறங்கி, பின்னோக்கிப் போன அன்புமணியின் நிலவரம், அவர் குடும்பத்தினரை அப்செட்டாக்கிடிச்சினு ஒரு தகவல் வந்தது.

Advertisment

pmk

மேலும் தைலாபுரம் அடங்கிய விழுப்புரம் தொகுதியில் தி.மு.க. சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் முன்னணியிலேயே இருந்ததை டாக்டர் ராமதாஸால் ஜீரணிக்க முடியலை. பா.ம.க. வேட்பாளரான வடிவேல் ராவணனைத் தொடர்புகொண்டு, விவரம் கேட்டிருக்காரு. சிறுத்தை வேட்பாளருக்கு தி.மு.க. ஓட்டு முழுமையா விழுந்திருக்கு. ஆனால் நமக்கு அ.தி.மு.க. ஓட்டுகள் முழுசா விழலை. நாம களமிறங்கிய 7 தொகுதியிலும் அவங்க நமக்கு உண்மையா செயல்படலைன்னு சொல்லியிருக்கார்.

ராமதாஸோ, இடைத் தேர்தல் நடக்கும் 22 தொகுதியில், 8 தொகுதி, நம் செல்வாக்குள்ள வட மாவட்டங்கள்ல வருது. அதனால் இவற்றில் நம்ம பலத்தில் ஜெயிப்போம்னுதான் எடப்பாடி நம்மைக் கூட்டணியில் சேர்த்துக்கிட்டார். இப்ப வெட்கக்கேடா இருக்குன்னு தன் வருத்தத்தைப் பகிர்ந்துக் கிட்டாராம். இதனால் அதிமுக, பாமக கூட்டணியில் விரிசல் விழுந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

anbumani ramadoss dharmapuri pmk Ramadoss vck
இதையும் படியுங்கள்
Subscribe