Advertisment

மு.க.ஸ்டாலின் இன்னும் நன்றாக திட்டட்டும், அப்படி திட்டினால் ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாகும் -ராமதாஸ் பேச்சு

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், பிரசார கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் பங்கேற்று பேசினார்.

Advertisment

mkstalin

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் அமேதி தொகுதியில் போட்டியிடுவதுடன், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அவரை பிரதமர் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ராகுலை பிரதமராக யாரும் ஏற்கவில்லை. மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு என்று பலருக்கு பிரதமர் பதவியின் மீது ஆசை உள்ளது.

Advertisment

தற்போது மு.க.ஸ்டாலின் கோபத்தில் என்னையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கண்டபடி திட்டுகிறார். அவர் இன்னும் நன்றாக எங்களை திட்டட்டும், அப்படி திட்டினால் ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாகும். அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க. கலைஞருடன் முடிந்து போய் விட்டது. மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரீகம் தெரியாமல் மேடைக்கு மேடை உளறுகிறார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ramadoss

வறுமையை ஒழிப்போம் என ராகுல் காந்தி கூறுகிறார். உங்களின் கொள்ளு தாத்தா நேருவும் அதை தான் சொன்னார். உங்களின் பாட்டி இந்திராகாந்தியும் அதை தான் சொன்னார். உங்கள் அப்பா ராஜீவ்காந்தி, அம்மா சோனியா காந்தி, உங்களின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எல்லோரும் அதை தான் சொன்னார்கள்.

இப்போது நீங்களும் அதை தான் சொல்கிறீர்கள். உங்களால் வறுமையை ஒழிக்க முடியாது. 10 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணி படுதோல்வி அடையும். நாட்டில் 100 இடங்களில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது. இவ்வாறு பேசினார்.

Election Krishnagiri loksabha election2019 pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe