Pasumai Thaayagam

புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுக்க காலநிலை அவசரநிலையை அறிவிக்கக் கோரி பசுமைத் தாயகம் சார்பில் இன்று (23.09.2019) முதல் 29ஆம் தேதி வரை சென்னை முழுவதும் காலநிலை அவசரநிலை பிரச்சாரம் நடைபெறவுள்ளது. இப்பிரச்சாரத்தை பசுமைத் தாயகம் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 10 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் அன்புமணி ராமதாஸ், கோ.க. மணி, ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.