எச்சரிக்கை தேவை - ராமதாஸ் ட்வீட்

ramadoss

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

அதில், ”கரோனா தினசரி பாதிப்புகள் அமெரிக்காவில் 28,561 ஆகவும், பிரேசிலில் 17,330 ஆகவும் குறைந்து விட்டது. ஆனால், இந்தியாவில் 89,852 ஆக அதிகரித்து விட்டது. உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 2.47 லட்சம் தொற்றுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்பட்டவை!

கரோனா தோற்று பரவத் தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் குறையத் தொடங்காத ஒரே நாடு இந்தியா தான். எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மக்கள் இதை கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்!” எனக்குறிப்பிட்டுள்ளார்.

corona Ramadoss twitter
இதையும் படியுங்கள்
Subscribe