Advertisment

“இது வேற வாய்...” என்ற காமெடியைப் போட்டு உங்களையும்...? -ராமதாஸ் மீது முரசொலி விமர்சனம்

நரிக்கண்ணீர் வடிக்காதீர் நன்றி மறக்காதீர் என்ற தலைப்பில் முரசொலியில் மருத்துவர் ராமதாசுக்கு பாட்டாளி தொண்டனின் பகீர் கடிதம் என்று கட்டுரை வெளிவந்துள்ளது.

Advertisment

அதில்,

மருத்துவர் அய்யா அவர்கட்கு! ஆழ்ந்த மன உளைச்சலிலும், கட்டிய கோட்டை எல்லாம் தகர்ந்து விட்டதே என்ற நிலையில், நிலை குலைந்தும் இருக்கும் தங்களுக்கு மேலும் எரிச்சலை உருவாக்கும் நோக்கத்தோடு அல்ல; விளக்கம் தரவே இந்தக் கடிதம்!

Advertisment

Ramadoss

தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும்; முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும்; என தி.மு.க. தலைவர் அறிவித்த அறிவிப்புக்குப் பாராட்டுத் தெரிவித்து, அதனை வரவேற்றிருப்பீர்கள் என எதிர்பார்த்தேன்.

ஆனால், நீங்களோ வெறுப்பை உமிழ்ந்துள்ளீர்கள் -எரிச்சலை கக்கியிருக்கிறீர்கள். உங்கள் அறிக்கையின் ஒவ்வொரு வரியும் விரக்தியின் வெளிப்பாடாகவே தெரிகிறது! மனசாட்சிக்கு விடைகொடுத்து விட்டு பலஉண்மைகளைப் படுகொலை செய்துள்ளீர்கள்!

“தங்களது அறிக்கையில் இடஒதுக்கீட்டை கலைஞர் மனமுவந்து தரவில்லை” - எனக் குறிப்பிட்டிருப்பது உங்கள் நெஞ்சத்தில் நிறைந்துள்ள வஞ்சத்தை காட்டுவதாக இல்லையா? வன்னியர் சங்கம் ஆரம்பித்துப் பின்னர் அதனைப் பாட்டாளிமக்கள் கட்சியாக்கி நீங்கள் பேசியதையும், கொடுத்த வாக்குறுதிகளையும் சுய வசதிக்காக மறந்தவர் நீங்கள் என்பதையும், என்னைப் போன்ற ஒவ்வொரு பாட்டாளி சொந்தமும்அறிவார்களே!

விழுப்புரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஒருமாநாடு நடத்தினோமே, நினைவிருக்கிறதா தங்களுக்கு! “சமுதாய விழிப்புணர்ச்சி மாநாடு”, “அரசியல் விழிப்புணர்ச்சிமாநாடு” என, மருத்துவர் அய்யா அவர்களே, தங்களதுதலைமையில்தானே அந்த மாநாடு நடத்தப்பட்டது.

அதுவாவது நினைவிருக்கிறதா? அந்த மாநாட்டில் கலைஞரை அழைத்து அலங்கரிக்கப்பட்டதனியானதொரு நாற்காலியில் அமர வைத்து என்னப் பேசினீர்கள் என்பது மறந்து விட்டதா? உங்கள் நினைவுக்கு நீங்கள் பேசியதில் சில பகுதியை தந்துள்ளேன். படித்துப் பாருங்கள்!.

“1989-ல் கலைஞர் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே இடஒதுக்கீடு பிரச்சினையைத் தீர்க்க பெருமுயற்சி எடுத்தார். அமைச்சர் வீரபாண்டி ஆறு முகத்தை அனுப்பி என்னை அவரது (கலைஞரின்) இல்லத்துக்கு அழைத்துப் பேசினார்.

அப்போது எங்களுக்குத் தனி இடஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டேன். ‘மற்றவர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள். வேறு சில சாதிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்’ என்றார்! நான் சில சாதிகளைச் சேர்த்து வைத்திருந்தப் பட்டியலை அவரிடம் கொடுத்தேன். அதன் பிறகு, ‘மிகவும்பிற்படுத்தப்பட்டோர்’ எனும் பிரிவை கலைஞர் உருவாக்கினார்! அதில் 107 பிரிவுகளைச் சேர்த்து ஆணைப்பிறப்பித்தார்!

‘நான் இந்த கனியைத் தருகிறேன். இதனைச்சாப்பிட்டுப் பாருங்கள். வன்னியருக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் முன்பு எவ்வளவு இடங்கள்கிடைத்தன. இப்போது எவ்வளவு கிடைக்கும் என்றுபாருங்கள்’ என்று கலைஞர் கூறினார். உண்மைதான். நாங்கள் இடஒதுக்கீட்டிற்காகப் போராடிய போது சட்டத்தில் இடமில்லை என்று சொன்னவர்களுக்குச் சாட்டையடி கொடுப்பது மாதிரி சட்டத்தில் இடமிருக்கிறது; இதற்கு ஒரு ஆணைப் பிறப்பித்தாலே போதும் என்று கூறி, அந்த ஆணையைப் பிறப்பித்த அந்தத் துணிச்சல், அந்தப் பக்குவம், அந்த மனப்பாங்குகலைஞருக்குத்தான் வந்தது. இந்தச் சமுதாயத்தைமதித்து ஆணையை வெளியிட்ட கலைஞர் அவர்களே, உங்களுக்கு இந்தச் சமுதாயம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது”- எனப் பேசிய ‘வாய்’ தானே தங்களது வாய்!

மருத்துவர் அய்யா; அவர்களே, இன்று இடஒதுக்கீட்டைகலைஞர் மனமுவந்து தரவில்லை என்று நன்றி மறந்து கூறலாமா? அன்று நம்மை எல்லாம் கூட்டி வைத்து அப்படிப்பேசிய மருத்துவர் அய்யா வாய் இன்று ஏன் மாறுபட்டுப் பேசுகிறது என நம் இனத்தவரே கேட்பார்களே; என்ன சொல்வது...நீங்கள் பேசியதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது!

இது சமூக ஊடகங்கள் பரவியுள்ள காலம்! இதுபோன்ற உங்கள்அறிவிப்புகள் ‘மீம்ஸ்’ தயாரிப்பாளர்களுக்கு ‘அல்வா’கிடைத்தது போலாகி விடுமே! அவர்கள் உடனே வடிவேலு பேசிய “இது வேற வாய்...” என்ற காமெடியைப் போட்டு உங்களையும் காமெடியனாக்கி விட மாட்டார்களா?

1967 முதல் 1996 வரை தி.மு.க. ஆட்சியில் இருந்த காலத்தில்என்று குறிப்பிடுகிறீர்கள் அறிக்கையில்! இது ஞாபக மறதியின்உச்சத்தைக் காட்டவில்லையா? 1977-க்குப் பிறகு நீங்கள்இன்று ஆதரித்து வரும் அ.தி.மு.க.தான் ஆட்சியிலிருந்ததுஎன்பதை எப்படி மறந்தீர்கள்?

மேலும் அந்த அறிக்கையில், 1967 முதல் 1996 வரை தி.மு.கழகம் ஆட்சியில் இருந்த காலத்தில் வன்னிய சமுதாயத்தைச்சேர்ந்த எவரையும் துணைவேந்தராகவோ, காவல்துறைதலைமை இயக்குநராகவோ நியமிக்கவில்லை என்றுகூறியிருக்கிறீர்கள்?

நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்தக் காலகட்டத்தில்முதல் 9 ஆண்டுகள்தான் தி.மு.கழகம் ஆட்சியில்இருந்தது. கலைஞர் முதல்வர் ஆனதும், அவரதுஆட்சியில் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவரே, இராயப்பா ஐ.ஏ.எஸ். அவர்கள்தான்! அவர்வன்னிய இனத்தைச் சார்ந்தவரல்லவா? நீங்கள்குறிப்பிடும் துணைவேந்தர், காவல் துறை தலைமைஇயக்குநர் பதவிகளுக்கு மேலான பதவியை கலைஞர்வன்னியருக்குத்தானே வழங்கினார்!

அந்த நேரத்தில் கடைசியாக இருந்த ஐ.சி.எஸ்.அதிகாரியாக இருந்த உயர் வகுப்பைச் சார்ந்த மணிஎன்பவருக்குத்தான் அந்தப் பதவியைத் தந்திருக்கவேண்டும் என்ற சர்ச்சைகள் எல்லாம் கூட கிளப்பப்பட்டது! கலைஞர் எதைப்பற்றியும் கவலைப்படாது பிறப்படுத்தப்பட்ட வன்னிய வகுப்பைச் சார்ந்த இராயப்பாஅவர்களை தலைமைச் செயலாளராக்கினார்! ஏன்முதல்வர் கலைஞரின் தனிச் செயலாளராக விளங்கியவரும் வைத்திலிங்கம் என்ற வன்னியர்தானே! இதை எல்லாம் எப்படி அய்யா மறந்தீர்கள்?

தி.மு.க.வில் வன்னியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதுஎன ‘நரிக் கண்ணீர்’ வடித்துள்ளீர்கள்! அமைப்பு ரீதியாக தி.மு.கழகத்துக்கு உள்ள 29 மாவட்டங்களில் 11 மாவட்டச்செயலாளர் பதவிகள் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுஎன நீங்களே குறிப்பிடுகிறீர்கள்! இந்த அளவு அதாவதுஏறத்தாழ 40 சதவீதம் வன்னியர்களுக்கு வழங்கியது அநீதி என்கிறீர்களா? புரியவில்லையே!இப்படிக்கு, விழிபிதுங்கி நிற்கும் பாட்டாளி தொண்டன்.

murasoli pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe