வாக்குறுதியை நிறைவேற்றியதால் இரண்டாவது முறையாக பிரதமரானார் மோடி: ராமதாஸ்

மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி விவரம்:

modi-ramadoss

2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக தாங்கள் பதவியேற்ற போது, ‘இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்காக உங்கள் ஒவ்வொருவருடனும் எப்போதும் இருப்பேன்” என்று உறுதியளித்து இருந்தீர்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். உங்கள் தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Narendra Modi Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe