நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றது. கூட்டணியில் ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைத் தேர்தல் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்தார். இதனிடையே வைகோவுக்கு தேச துரோக வழக்கில் 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் நிற்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று சொல்லப்பட்டது.

Advertisment

admk

இந்த நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் மனுவை ஏற்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள் மற்றும் கட்சி சாராதவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ' தனது ராஜ்யசபா எம்பி சம்பளம் முழுவதையும் தனது கட்சியின் கணக்கில் வரவு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், தன்னுடைய உடல் நலம் எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ, அந்த அளவுக்கு கட்சிக்காக உழைப்பேன் என்றும் கூறினார்.