மாநிலங்களவையில் இன்று 5 ராஜ்ய சபா எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடையும் நிலையில், அதிமுக சார்பாக மாநிலங்கவை உறுப்பினராக இருந்த மைத்ரேயன் தனது கடைசி உரையை மாநிலங்களவையில் பேசும் போது கண்ணீர் விட்டு அழுதார். அவர் பேசும் போது, என் மேல் நம்பிக்கையும் , பாசமும் வைத்து என்னை மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.யாக அதிமுக சார்பாக தேர்ந்த்தெடுத்து அனுப்பியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்கு விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் இருந்தேன்.

Advertisment

admk

அதே போல் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லீக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒரு சகோதரன் போல் மாநிலங்களவையில் என்னை வழிநடத்தி அறிவுரை வழங்குவார் என்றும் தெரிவித்தார். மேலும் பாரத பிரதமர் மோடிக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். மோடியை எனக்கு 1990ல் இருந்து தெரியும் அப்போது இருந்து இப்ப வரை நண்பன் போல் என்னை அரவணைத்து செல்வார் அதை என்னால் வாழ் முழுவதும் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார். தனது கடைசி உரையை மாநிலங்களவையில் பேசும் போது கண்ணீர் விட்டு அழுதார்.