தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 8 ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.தமிழகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக மற்றும் அதிமுக சார்பாக தலா 3 பேரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க முடியும்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த நிலையில் வேட்புமனு பரிசீலனை ஜூலை 9ஆம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் ஜூலை 11 என்றும் அறிவித்துள்ளனர். மேலும் ஜூலை 18ஆம் தேதி காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும், ஜூலை 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.