ADVERTISEMENT

ராஜ்ய சபா சீட் - பாமகவுக்கு கொடுக்கணுமா? யோசிக்கும் அதிமுக தலைமை 

12:46 PM May 24, 2019 | rajavel

ADVERTISEMENT

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடும் என முடிவு எடுத்து திமுக, அதிமுக இரு அணிகளிலும் பேசி வந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக 7 பாராளுமன்றத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றது. இதையடுத்து தமிழக அரசியல் களத்தில் பாமக மீது கடும் விமர்சனம் எழுந்தது.

ADVERTISEMENT



நாடாளுமன்ற தேர்தல் முடிவில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இது பாமக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட் உள்ளது என்ற நம்பிக்கையிலும் உள்ளது. ஆகையால்தான் அதிமுக கூட்டணிக்கு பணியாற்றிய தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி என அறிக்கை வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.
இந்தநிலையில், அதிமுக தலைமை நிர்வாகிகள், அதிமுக ஆட்சி நீடிக்க தேவையான வெற்றியை அதிமுக பெற்றுவிட்டது. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற நாம் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டோம். ஆனால் கூட்டணிக் கட்சிகள் நமக்காக பேருக்குத்தான் வந்தார்களே தவிர, சொல்லும்படி பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. கடைசியாக நடந்த நான்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்று பத்திரிகையில் விமர்சனம் வந்த பிறகு வந்தார்கள்.


பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறோமோ, இல்லையோ அது வேறு. தமிழக மக்களுக்காக குரல் கொடுக்க ராஜ்யசபா சீட் அதிமுகவுக்குத்தான் வேண்டும். நம்ம தயவில் கூட்டணிக்கட்சிகாரர்கள் அங்கு போய், தமிழகத்திற்கு குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு அவர்கள் கட்சியைத்தான் வளர்க்க பார்ப்பார்கள். பாமக ஒரு இடத்திலாவது வெற்றிப் பெற்றிருந்தால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியிருக்கலாம்.


ஆகையால் ராஜ்ய சபா சீட் யாருக்கும் வழங்க கூடாது. அதிமுக எம்பி மக்களவையில் ஒருவர்தான் இருக்கிறார். மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் நமக்கு வேண்டும் என்பதால் கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் இந்த ராஜ்ய சபா சீட்டை வழங்கக்கூடாது என்று பேசி வருகிறார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT