Advertisment

எனக்காகத்தான் ராஜ்ய சபா சீட் தரப்பட்டது.... என்.ஆர். இளங்கோ மனுத் தாக்கல் செய்தது... வைகோ பேட்டி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றது. கூட்டணியில் ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஈரோடு மக்களவைத் தொகுதியில் கணேச மூர்த்தி, திமுக சின்னத்தில் வெற்றி பெற்றார்.

Advertisment

இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைத் தேர்தல் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்தார்.

vaiko

இதனிடையே வைகோவுக்கு தேச துரோக வழக்கில் 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் நிற்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. ஒருவேளை வைகோ மனு நாளை நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதில் ஒருவரை நிறுத்த தி.மு.க. முடிவெடுத்தது.

Advertisment

அதற்காக இன்று காலை தி.மு.க.வை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ கோட்டைக்கு வந்தார். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலரான பேரவை செயலாளரிடம் திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நான் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினார். தேர்தலின்போது பேச்சுவார்த்தையில், எனக்காகத்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டது. மாநிலங்களவை தேர்தலில் தனது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலினிடம் நான்தான் கூறினேன். நான் கூறியதை அடுத்து திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேறொரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால் வேட்பு மனு பரிசீலனையின்போது நான் இருக்க முடியாத சூழல் உள்ளது என்றார்.

mdmk Rajya Sabha vaiko
இதையும் படியுங்கள்
Subscribe