கடந்த 5ஆம் தேதி சென்னையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். அப்போது நடப்பு அரசியல், மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது.

Rajinikanth - thirunavukkarasar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் ரஜினிகாந்தை இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் நேரில் சந்தித்துப் பேசினார். நடப்பு அரசியல் விவகாரங்களையும் ரஜினி தொடங்க இருக்கும் கட்சி குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த சந்திப்பு முடிந்த பின்னர் வெளியே வந்த செ.கு.தமிழரசன் ரஜினி மக்களுக்காக பணியாற்றுவதில் உறுதியாக இருக்கிறார் என்று கூறினார்.

தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் ஆலோசனை நடத்தி வரும் ரஜினிகாந்தை, காங்கிரஸ் எம்பியான திருநாவுக்கரசர் இன்று காலை சந்திக்க உள்ளார். நடப்பு அரசியல், 2021 சட்டமன்றத் தேர்தல் எப்படி இருக்கும், கூட்டணிகள் எப்படி அமையும் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது.