Advertisment

நடிகர் ரஜினிக்காக தமிழகம் காத்திருக்க வேண்டும்..! சொல்கிறார் தமிழருவி மணியன்

ரஜினி அரசியலுக்கு வருவதை எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

Advertisment

ஈரோடு பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கிருந்த செய்தியாளர்களை பேட்டி கொடுக்கிறேன் எனச் சொல்லி அழைத்தார். பிறகு அவரே பேசத் தொடங்கினார்.

Advertisment

erode -

அப்போது, "நடிகர் ரஜினிகாந்த் கட்டாயம் அரசியலுக்கு வருவார். வருகிற சட்டசபை தேர்தல் வரும்போது அவர் அரசியலில் இருப்பார். ரஜினிகாந்தை ஏதாவது குறைகூறிக் அச்சுறுத்தி, மிரட்டி அவரின் இல்லமான போயஸ் கார்டனுக்குள் முடக்க சிலர் நினைக்கின்றனர். ஆம், அது ஒருபோதும் நடக்காது.

தந்தை பெரியார் குறித்து அவர் தவறாக பேசவில்லை. இன்னும் என்னைக் கேட்டால் அவர் பெரியார் குறித்தே பேசவே இல்லை என்று தான் நான் சொல்லுவேன். இந்த விவகாரத்தில் ஒரு சிலர் அரசியலுக்காக பெரிதுபடுத்தி பேசி வருகிறார்கள். ரஜிணியும் அதை பற்றி கவலைப்படவில்லை.

அவர் வழக்கம்போல் மிகுந்த உற்சாகத்துடன் அரசியலுக்கு வர உள்ளார். அது உறுதி. அரசியல் கட்சியை விரைவில் தொடங்க உள்ளார் என்பதை நான் நன்கு அறிவேன். அவர் கட்சி தொடங்கும் வரை நாம் அவருக்காக காத்திருந்து தான் ஆக வேண்டும்'' என முடித்துக் கொண்டார். செய்தியாளர்களும் வேறு எந்த கருத்தையும் கேட்டு நேரம் கடத்தாமல் கிளம்பி விட்டனர்.

Erode tamilaruvi manian rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe