Advertisment

”எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன்” - ரஜினிகாந்த் பேச்சு

அரசியல் கட்சிஆரம்பிப்பதுபற்றிய முக்கியமுடிவுகளைஇன்று ரஜினிகாந்த் ஊடகங்களை சந்தித்துஅறிவிக்கஇருக்கிறார் எனஅறிவிப்புகள் வெளியானநிலையில்,இன்று காலை முதல் ரஜினி மக்கள் மன்றநிர்வாகிகள் ரஜினிகாந்த் வீடு உள்ள போயஸ் கார்டன்பகுதியில்குழுமினர்.அப்பொழுது சிலநிர்வாகிகள் கட்சி ஆரம்பித்தால்ரஜினிகாந்த் தான் கட்சியின் முதல்வர் வேட்பாளராகஇருக்க வேண்டும்எனதங்களதுகருத்துகளைதெரிவித்தனர்.

Advertisment

போயஸ் கார்டன்இல்லத்தில் நடக்கும்நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளரை அவர் சந்திக்கதிட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி சென்னைலீலா பேலஸ்ஹோட்டலில்செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஇன்றுகாலை10 மணி அளவில் வீட்டில் இருந்துசென்னை லீலா பேலஸ் ஹோட்டலுக்கு புறப்பட்டார்.அப்பொழுது அவரதுரசிகர்கள் அவரது கார் மீது பூக்கள்தூவி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

rajinikanth

அந்த சந்திப்பில் ரஜினிகாந்த்பேசியதாவது, கடந்த5 ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பில் எனக்குஒரு ஏமாற்றம் இருந்ததாககூறியிருந்தேன். நான் கூறியவிஷயங்களைஊடகங்கள் பல்வேறு மாதிரி வெளிப்படுத்தின. 1996 இல் இருந்து நான் அரசியலுக்கு வரப்போகிறேன் எனகூறியதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல, நான் முதன் முதலில் 2017 ல்தான் அரசியலுக்கு வருவேன்எனதெரிவித்தேன். நான் பதவிக்குவரவேண்டும் என நினைத்திருந்தால் 1996 லேயேஅந்தநாற்காலிஎன்னை தேடிவந்தது.

Advertisment

சிலர் அரசியலைதொழிலாக வைத்துள்ளனர்.திமுக,அதிமுகஎன பெரிய கட்சிகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் உட்கட்சி பதவிகள் இருக்கிறது. நாம் கட்சிஆரம்பித்தால் தேர்தல் நேரத்தில் மட்டுமேகட்சி நிர்வாகிகள் அதிகம் வேண்டும்.அதேபோல்கட்சியில் தலைவர் மட்டுமேநான். முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை. நான் கனவில் கூட நான் என்னைமுதல்வராக நினைக்கவில்லை. சட்டமன்றத்தில்பேசுவது இதெல்லாம் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கட்சியில் தேவையான நிர்வாகிகள் மட்டும் போதும்.

rajinikanth

கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்குஒரு தலைமை எனநான் கூறியதை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை சில இளைஞர்கள் மட்டும் ஏற்றுக்கொண்டனர். அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், அதிகாரிகளுடன் நான் ஆலோசனையில் இருந்தேன். அரசியலில் அழகு பார்ப்பது எனக்கு பிடிக்காது. எம்ஏல்ஏ ஆகணும், எம்பி ஆகி அழகு பார்க்கணும்என்பதெல்லாம் எனக்கு பிடிக்காது.

நாம் எதிர்க்கபோவதுஇரண்டு ஜாம்பவான்களாக இருக்கும்திமுக, அதிமுகஆகிய கட்சிகளை என்பதை மனதில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் சரியான ஆளுமை இல்லை. ஆள் பலம், பண பலம் இருந்தும் கலைஞரின் அரசியல்வாரிசு என்பதைநிரூபிக்கும் நிலையில் ஸ்டாலின் உள்ளார். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலை உருவாக வேண்டும். அவ்வாறு உருவானால் அசுர பலமுடையகட்சிகள்உடையும். இந்த வயதில் என்னை நம்பி வர இருக்கிறீர்கள் முதலிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடுவது நல்லது.

என்னைவருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சிவேண்டும் என்பதைநீங்கள் உணர்ந்து உழைத்துஅந்த எழுச்சி மக்களிடம்ஏற்பட்டால்தான் நான்அரசியலுக்கு வருவேன் என்றார்.

politics rajinimandram rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe