style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அரசியல் கட்சி ஆரம்பிப்பது பற்றிய முக்கிய முடிவுகளை இன்று ரஜினிகாந்த் ஊடகங்களை சந்தித்து அறிவிக்க இருக்கிறார் என அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று காலை முதல் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ரஜினிகாந்த் வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதியில் குழுமினர். அப்பொழுது சில நிர்வாகிகள் கட்சி ஆரம்பித்தால் ரஜினிகாந்த் தான் கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

போயஸ் கார்டன் இல்லத்தில் நடக்கும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளரை அவர் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “என்னை வருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சிவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சி மக்களிடம் ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன் என்றார்.

Advertisment