திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சளி, மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 24-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்குதொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தச் சூழலில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அன்பழகனின் உடலுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு மிகப்பெரிய இழப்பு. பேராசிரியர் தன் வாழ்வில் சம்பாதித்தது மதிப்பும், மரியாதையும்தான். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.