edappadi palanisamy

Advertisment

அண்மையில் பா.ஜ.க. தரப்பில் இருந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்ட சிலர், நீங்கள் உங்கள் கட்சித் தலைவராக ரஜினியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டெல்லி விரும்புகிறது. அப்படி ஏற்றுக்கொண்டால் சிக்கலே இல்லாமல் உங்க ஆட்சி தேர் ஓடும். உங்கள் தரப்பும் மேற்கொண்டு சிக்கல்களில் சிக்காமல் தப்பிக்கும்ன்னு மறைமுக மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.

இதைக் கேட்டு திகைத்துப்போன எடப்பாடி பழனிசாமி, கலைஞரின் புகழ் பாடுகிறவர் ரஜினி. அப்படிப்பட்டவரை நாங்கள் தலைவராக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று நழுவியிருக்கிறாராம்.

இந்த நிலையில் வைத்திலிங்கம் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம், எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் கட்சியை பலவீனப்படுத்திவிட்டார்கள். அதனால்தான் டெல்லி தைரியமாக நம்மை மிரட்டுகிறது என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.