Advertisment

தமிழகத்தில் அடுத்த முதல்வர் ரஜினி தான் - கராத்தே தியாகராஜன் அதிரடி!

தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார். காலம் குறைவாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்று கூறியிருந்தார். அதே போல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று ரசிகர்களை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்தித்து பேசும் போது, எனக்கு பணம் புகழ் வேண்டாம். நினைத்ததைவிட பல மடங்கு அவற்றை நீங்கள் எனக்கு கொடுத்துள்ளீர்கள் என்று கூறினார். மேலும் என்னைத் தேடி 1996- ஆம் ஆண்டே பதவி வந்தது. 45 வயதில் பதவிக்காக ஆசைப்படாத நான் 65 வயதிலா ஆசைப்படப் போகிறேன் என்று கூறினார்.

Advertisment

rajini

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கிய பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்து ரஜினி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வருகிற பொங்கல் தினத்தன்று தனது அரசியல் கட்சியின் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறிவருகின்றனர். இந்த நிலையில், கராத்தே தியாகராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்பப் போவது ரஜினி தான், ரஜினி இன்னும் 6 மாதத்தில் கட்சி தொடங்குவார், 2021-ல் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற்று, முதலமைச்சர் ஆவார் என்று கூறினார்.

Advertisment
Election politics rajinikanth karate thiagarajan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe