தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார். காலம் குறைவாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்று கூறியிருந்தார். அதே போல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று ரசிகர்களை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்தித்து பேசும் போது, எனக்கு பணம் புகழ் வேண்டாம். நினைத்ததைவிட பல மடங்கு அவற்றை நீங்கள் எனக்கு கொடுத்துள்ளீர்கள் என்று கூறினார். மேலும் என்னைத் தேடி 1996- ஆம் ஆண்டே பதவி வந்தது. 45 வயதில் பதவிக்காக ஆசைப்படாத நான் 65 வயதிலா ஆசைப்படப் போகிறேன் என்று கூறினார்.

rajini

Advertisment

Advertisment

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கிய பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்து ரஜினி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வருகிற பொங்கல் தினத்தன்று தனது அரசியல் கட்சியின் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறிவருகின்றனர். அதோடு, 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்று கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி கட்சியின் பெயரை அறிவிக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.