ADVERTISEMENT

திமுகவிற்கு எதிராக ரஜினியின் டார்கெட்... பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா... சைலண்டாக இருக்கும் திமுக! 

12:46 PM Mar 21, 2020 | Anonymous (not verified)

அரசியல் கட்சி தொடங்கும் முன்பே இணைய தள தொழில் நுட்பக் குழுவை ரஜினி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வலைத்தள செயல்பாடுகளுக்காக தொழில் நுட்பக் குழுவை நியமித்திருப்பது போல் ரஜினியும், அப்படிப்பட்ட ஒரு குழுவோடு இணைந்திருக்கிறார். அந்தக் குழு தான், அவரோட லீலா பேலஸ் ஸ்பீச்சில் அவர் கூறிய தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா... எப்பவுமே இல்லைங்கிற டயலாக்கை ரஜினியின் அனுமதியோட வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இதற்கு கிடைத்த வரவேற்பு, ரஜினியை உற்சாகப்படுத்தியிருப்பதாக சொல்கின்றனர். ரஜினியும் அவர்களை என்கரேஜ் பண்ணியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதையடுத்துதான், ஒரு விருது விழாவில் பேசும் போது, நான் புள்ளி வச்சிட்டேன். அது சுழலா மாறியிருக்கு. அப்புறம் அலையாகி, தேர்தல் நேரத்தில் சுனாமியாகும்னு பஞ்ச் டயலாக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT



மேலும் அந்த விருது விழாவில் கலந்துக் கொண்ட ரஜினி, கலைஞரை சி.எம். ஆக்கியது எம்.ஜி.ஆர்.தான் என்றும், தி.மு.க.வில் இருந்து வெளியே வந்து எம்.ஜி.ஆர். கணக்குக் கேட்ட போது, அவர் மீது அனுதாப அலை உருவானது என்றும், 1991-ல் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது தி.மு.க. வுக்கு எதிரான அலை உருவாகி ஜெ.வை முதல்வராக்கியது என்று ஆரம்பித்து, தி.மு.க. தரப்பை விமர்சனம் செய்துள்ளார். வழக்கமாக இது போன்ற ரஜினியின் தாக்குதல்களுக்கு அதிரடி பதில் கொடுப்பது உதயநிதியின் வழக்கம். ஆனால், இந்த முறை அவர் சைலன்ட். ஸ்டாலினும் வழக்கம்போல இதற்கு பதிலளிக்கவில்லை. காரணம், ’சீண்ட நினைக்கும் எதிரியை சைலண்டாக அலட்சியப்படுத்துங்கன்னு தேர்தல் வியூக வகுப்பாளரான ’ஐபேக்’ ஆலோசனை கூறியிருப்பதாக கூறுகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT