Advertisment

இவ்வளவு பாதிப்பு இருக்குனு தெரிஞ்சுகிட்டேன்... பாமக கூட்டணி பற்றி ரஜினி எடுத்த முடிவு... எடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்! 

இஸ்லாமிய அமைப்பான ஜமா அத்துல் உலமா சபையினரை ரஜினி சந்திதிருப்பதை அரசியல் கட்சியினர் உற்று கவனித்து வருகின்றனர். கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் நடந்த இந்த சந்திப்பு காட்சிகள், ரஜினியின் அரசியல் என்ட்ரி பற்றிய பேச்சுகளை மறுபடியும் விறுவிறுப்பாக்கியிருப்பதாக சொல்கின்றனர்.

Advertisment

அதோடு மார்ச்1 ந் தேதி உலமா சபையைச் சேர்ந்த முஸ்லிம் மத குருமார்கள் 5 பேருக்கு ரஜினி நேரம் ஒதுக்கியிருந்தார். சி.ஏ.ஏ., என்.ஆர்.சியின் பாதிப்புகளை அவங்க எடுத்து கூறியதை ரஜினி ஆச்சரியமாக கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இத்தனை பாதிப்பு இருப்பதை தற்போது தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னதோடு, அவர்களுடைய நிகழ்வுக்கும் வருவதாக கூறியிருக்கிறார்.

rajini

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மேலும் இப்படிப்பட்ட நேரத்தில் போலீஸ் பாதுகாப்பை ரஜினி, வேண்டாம் என்று சொல்லியிருக்கார். துக்ளக் விழா சர்ச்சை பேச்சைத் தொடர்ந்து போயஸ் கார்டன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருந்தார்கள். அதை விலக்கும் படி ரஜினி கூறிய நிலையில், சென்னை மாநகர உளவுப்பிரிவின் துணை ஆணையரான திருநாவுக்கரசு, ரஜினியை நேரிலேயே சந்தித்துப் பேசினார். ரஜினியோ, பாதுகாப்புக்கான தேவை தற்போது இல்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். அதுவும் கூட வேண்டாம் என்பது தான் ரஜினியோட நிலை என்று சொல்லப்படுகிறது. ரஜினியின் அரசியல் என்ட்ரி பற்றி எதிர்பார்ப்பு இருப்பதால், பலரும் அவரது வீட்டுக்கு வந்து சந்திக்கிறார்கள். இதில் சர்வீசில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் உண்டு. பாதுகாப்பு என்கிற பேரில், இதையெல்லாம் நோட் செய்து அரசுத் தரப்புக்கு அனுப்புவதை விரும்பாத காரணத்தால் தான், பாதுகாப்பு தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சொல்கின்றனர்.

மேலும் ரஜினியும், கமலும் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. டெல்லி கலவரம் பற்றி பேட்டி அளித்த ரஜினியின் வார்த்தைகளில் பா.ஜ.க. மீதான விமர்சனமும் இருந்ததால், கமல் தனது ட்விட்டரில் வரவேற்றார். மக்கள் நீதி மய்யஆண்டு விழாவில் பேசிய கமல், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத கூட்டணியை அமைப்போம் என்றும் கூறியுள்ளார். ரஜினிகிட்டேயும் இது பற்றி கமல் பேசியிருக்கிறார். வியூகம் வகுக்கும் வேலைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. பா.ம.க.வோடும் தனிப்பட்ட முறையில் ரஜினி தரப்பு பேசி, முடிவெடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதனால் ரஜினியின் அரசியல் என்ட்ரி பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியிருப்பதாக சொல்கின்றனர்.

admk eps kamalhaasan pmk politics rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe