சமீபத்தில் சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார்.

Advertisment

rajini

இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட்டம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது ரஜினிகாந்த் அவுட்லுக் என்ற பத்திரிகையின் ஆதாரங்களை காண்பித்து தான் கூறியது சரிதான் என்றும் கூறினார். மேலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக கூறினார்.

periyar

Advertisment

இந்த நிலையில் சென்னை புத்தக கண்காட்சியில் பெரியார் பற்றிய வாழ்க்கை வரலாறு மற்றும் பெரியார் குறித்த புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளதாக வெளியீட்டாளர்கள், பதிப்பகத்தினர் கூறி வருகின்றனர். பெரியாரின் முக்கியமான கட்டுரைகள், தலையங்கங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று இந்த ஆண்டும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாக பதிப்பகத்தினர் கூறுகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டு பெரியார் குறித்த புத்தகங்கள் மொத்தமாக 2000 புத்தகங்கள் விற்பனையானதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு 3500 புத்தகங்கள் வரை விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இந்த ஆண்டு 25 முதல் 35 வயது உட்பட்டோர் அதிகமாக பெரியார் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதாகவும் கூறுகின்றனர்.