Advertisment

விழா மேடையில் சட்டென்று காலில் விழுந்த ரஜினிகாந்த்... யார் காலில் தெரியுமா?

சில தினங்களுக்கு முன்பு போயஸ் கார்டன் இல்லத்தில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு ரஜினி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களைச்சந்தித்துப் பேசினார். அப்போது, "என்னை வருங்கால முதல்வர் எனச் சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சிவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சி மக்களிடம் ஏற்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Advertisment

rajini

அரசியல் கட்சி தொடங்குவதைப் பற்றிய புதிய அறிவிப்பை அவர் அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஜினியின் இந்தப் பேச்சு ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. அதுமட்டும் இல்லாமல், தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சியினருக்கு பதவி, 65 சதவீதம் இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்ற மூன்று திட்டங்களைத் தெரிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் நிலைப்பாடு அரசியல் அரங்கில் பரபரப்பாகப்பேசப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் தற்போது சென்னை எம்.ஆர்.சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், "அரசியலில் நான் வைத்த புள்ளி அலையாக மாறியது, தற்போது சுழலாக உள்ளது. விரைவில் சுனாமியாக மாறும். நான் சொன்ன அரசியல் அற்புதம் நிச்சயம் நிகழும்" என தெரிவித்துள்ளார். அவர் சொன்ன அரசியல் அற்புதம் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, ”நான் ஒரு புள்ளி போட்டேன். அந்த புள்ளி இப்போது சுழலாக மாறி உள்ளது. அதை அலையாக மாற்ற இந்த ரஜினிகாந்த் வருவான். ரஜினி ரசிகர்களும் வருவார்கள். தேர்தல் நெருங்க நெருங்க அந்த அலை சுனாமியாக மாறும்” என்று கூறினார். மேலும் தேர்தல் அரசியல் சுனாமி ஏற்படுத்துவது ஆண்டவன் கையில் இருக்கிறது என்றும் மக்களாகிய நீங்கள்தான் ஆண்டவன் என்றும் அந்த அற்புதம் அதிசயம் நிச்சயம் நிகழும் என்றும் பேசினார். மேலும் எல்லார் பேச்சையும் கேட்கிறவனும் உருப்பட மாட்டான். யார் பேச்சையும் கேட்காதவனும் உருப்பட மாட்டான் என்றும் கூறினார். அப்போது அந்த விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி வாங்கினார். இதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசையின் தந்தை என்பது குறிப்படத்தக்கது.

Speech Leader congress politics rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe