Skip to main content

அரசியல் பேசும் ரஜினி மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது -மன்சூர்அலிகான் தாக்கு

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

 

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றி வித்தியாசமான முறையில் பிரசரம் செய்து வருகிறார். இதனால் திமுக, பாமக வேட்பாளர்களுக்கு இணையாக இவரது பிரச்சாரமும் தொகுதி முழுவதும் கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆத்தூர், பஞ்சம்பட்டி, ஆரியநல்லூர், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று மன்சூர்அலிகான் பிரசாரம் மேற்கொண்டார். 

 

mansoor ali khan



அப்போது பொதுமக்களிடையே பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய பிரச்சினையாக உள்ளது குடிநீர் பிரச்சனை. எனவே என்னை தேர்ந்தெடுத்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். மற்ற கூட்டணிகள் எல்லாம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சேர்ந்துள்ளனர். ஆனால் நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன். உங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

 

நடிகர் ரஜினிகாந்த் திடீரென அரசியல் பேசுவார். புதிய பட அறிவிப்பு வரும் போது மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசுகிறார். அதன் பின்னர் அமைதியாகி விடுகிறார். மற்றொரு புதிய படம் வெளியாகும் போது அறிக்கை வெளியிடுவார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது. இவ்வாறு பேசினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.