Rajini makkal mandram women district secretaries joins DMK

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை.ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சில நிர்வாகிகள் ரசிகர் மன்றத்திலிருந்து விலகினர்.

Advertisment

Rajini makkal mandram women district secretaries joins DMK

அதன் தொடர்ச்சியாக, மாரியம்மாள் (திண்டுக்கல்), சத்யா செல்வராஜ் (கடலூர்), விஜய லட்சுமி ரோபர்ட் (காஞ்சிபுரம்), அமுதா (தஞ்சாவூர்), கவிதா (திருவண்ணாமலை), கீதா கலைவாணி (கோயம்புத்தூர்), யமுனா (விழுப்புரம்), சத்யா மகாலட்சுமி (திருவள்ளூர்), பிரேமா (நீலகிரி), இன்பவள்ளி (மதுரை) ஆகிய ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி மாவட்டச் செயலாளர்கள் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளனர். திமுக வடசென்னை தொண்டரணி துணைச் செயலர் லட்சுமி வேலுவைச் சந்தித்த இவர்கள், தாங்கள் திமுகவில் இணைந்துகொள்வதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து லட்சுமி வேலுவின் ஏற்பாட்டின்பேரில் ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணியின் மேற்குறிப்பிட்ட 10 மா.செ.க்களும் வரும் புதன்கிழமை (21.07.2021) அன்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைகின்றனர்.