Advertisment

ரஜினி மன்றத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் விலகல் - ஸ்டாலின் முன்னிலையில்...

ரஜினி மன்றத்தினர் 20 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற உள்ளது என்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் அறிவித்துள்ளார்.

Advertisment

rajini-stalin

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த டி.மதியழகன் தலைமையில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக அளவிலான அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் 20 ஆயிரம் பேர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி 23.02.2019 அன்று மாலை 4 மணி அளவில் கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள தேவராஜ் மகால் முன்பு உள்ள கலைஞர் திடலில் நடைபெறும் பிரம்மாண்ட இணைப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.

Deviation join rajini makkal mandram rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe