கரோனா சிகிச்சைக்கான தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க நடிகர்கள் பலரும் தங்கள் இடங்களைக் கொடுக்க முன்வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதே போல் கரோனா மருத்துவ வார்டுகளை அமைக்க நடிகர் கமல், பார்த்திபன் உள்ளிட்ட திரைத்துறையினர் சிலர், தங்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் ஒதுக்க முன்வந்துள்ளதாகச் சொல்கின்றனர். இவர்கள் எல்லாம் இப்படி பகிரங்கமாக அறிவித்திருக்கும் நிலையில், அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கும் ரஜினி என்ன செய்யப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் கிளம்பியது.

Advertisment

rajini

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தைக் கரோனா சிகிச்சை மையம் அமைக்கக் கொடுக்கலாமா? என்று தனது திருமதியான லதா ரஜினிகாந்திடம் அவர் ஆலோசித்து இருப்பதாக சொல்கின்றனர். இதற்கு லதாவும், க்ரீன் சிக்னல் கொடுத்திருப்பதாக ரஜினி வட்டாரத்தில் இருந்தே தகவல் வெளிவருவதாகச் சொல்லப்படுகிறது.