Advertisment

ரஜினி மன்ற நிர்வாகிகள் 350க்கும் மேற்பட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர் 

rajini- stalin

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (8-2-2019) மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த “ரஜினி மக்கள் மன்றத்தின்” மாவட்டச் செயலாளர் டி.மதியழகன் தலைமையில், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் எம்.ரஜினிகுமார், மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எஸ்.பெரியசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப் அணிச் செயலாளர் எம்.கேவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் இ.ஜெகவீரபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.டி.மகேந்திரன், கே.வி.பாஸ்கரன், எஸ். ஜெயராஜ் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் ரஜினி மன்ற நிர்வாகிகள் - அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

Advertisment

rajini- stalin

ரஜினி மக்கள் மன்றத்தின் அணிகளின் மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் கே.ஜெயேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜே.சுரேந்தர், கே.செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.பாலாஜி, எம்.விநாயகம், பி.எல்.சக்திவேல், டி.வெங்கடேசன் - மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எஸ்.சுமிதா - மாவட்ட வர்த்தகர் அணி செயற்குழு உறுப்பினர் ஏ.ஜெயபால் -மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் என்.நாராயணன், மாவட்ட துணைச் செயலாளர் டி.செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.மாதேசன், ஆர்.சரவணன், எஸ்.விஜய்சங்கர், என்.வேல்முருகன் உள்ளிட்ட அஞ்செட்டி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, கெலமங்கலம், சூளகிரி கிழக்கு, சூளகிரி மேற்கு, தளி, பர்கூர், மத்தூர், வேப்பனப்பள்ளி ஆகிய ஒன்றிய செயலாளர் மற்றும் அணி நிர்வாகிகள் - கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் மற்றும் அணி நிர்வாகிகள் பர்கூர், காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி, ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய பேரூரைச் சேர்ந்த செயலாளர் மற்றும் அணி நிர்வாகிகள் 350க்கும் மேற்ப்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

Advertisment

rajini- stalin​    ​

இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முன்னிலையில் “ரஜினி மக்கள் மன்றத்தைச்” சேர்ந்த 25,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகிற 23-2-2019 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள “கழகத்தில் இணையும் விழா” நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின்போது, முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.செங்குட்டுவன், எம்.எல்.ஏ., மாவட்ட முன்னாள் செயலாளர் இ.ஜி.சுகவனம், முன்னாள் எம்.பி., எம்.வி.வெற்றிச்செல்வன், விவசாய அணி துணைச் செயலாளர் டி.வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

joins administrators rajini makkal mandram rajini rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe