Skip to main content

ரஜினி, ராமதாஸிற்கு வருத்தத்தை ஏற்படுத்திய சம்பவம்... யார் அந்த இருவர்... பாமகவில் ராமதாஸ் போட்ட அதிரடி உத்தரவு!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

ரஜினி ஏப்ரலில் கட்சி தொடங்கி, ஆகஸ்ட்டில் மாநாடு நடத்தி, செப்டம்பரில் சுற்றுப் பயணம் என்று  அறிவித்தது மட்டுமில்லாமல் பா.ம.க.வுடன் கூட்டணி பற்றியும் அவர் முடிவெடுப்பார் என்று உற்சாகமாகப் பேட்டி கொடுத்த தமிழருவி மணியன், அதே வேகத்தில் ரஜினியாகக் கட்சி தொடங்கும்வரை, அது குறித்து நான் வாயைத் திறக்கப் போவதில்லை என்று விரக்தியை வெளியிட்டிருக்கிறார். 
 

pmk



பா.ம.க.வுக்கும், ரஜினிக்கும் இடையில் மலர்ந்த நட்புறவை முதலில் அம்பலப்படுத்தியது நம்ம நக்கீரன்தான். இதையே மணியனும் அழுத்தமாக உணர்த்தியிருந்தார். நட்புக்கான வடிவம் இன்னும் முழுமை பெறுவதற்குள், இது பற்றி மணியன் போட்டு உடைத்து விட்டதில், ராமதாசுக்கும் ரஜினிக்குமே வருத்தம் உள்ளதாக சொல்கின்றனர். அதன் எதிரொலிதான் தமிழருவி மணியனின் முடிவு என்கின்றனர். இந்த நிலையில் தாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதாக மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார் ராமதாஸ். இந்த நிலையில், அரசியல் விமர்சகர்கள் இருவர் ஆடிட்டர் குருமூர்த்தி அனுப்பியதாகக் கூறி, அன்புமணியை சந்திக்க முயன்றிருக்கிறார்கள். அன்புமணி இது பற்றி குருமூர்த்தியிடமே விசாரிக்க, நான் யாரையும் அனுப்பவில்லை என்று அவர் சொல்லிவிட்டார். அதனால், அந்த இருவரையும் அனுப்பியது யார் என்று விறுவிறுப்பாக விசாரித்துக்கொண்டு இருக்கிறார் என்கின்றனர். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.