தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Udhayanidhi Stalin - Rajenthra Bhalaji.jpg)
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 23ஆம் தேதி அன்று காலை வாக்கு எண்ணிக்கை முடிவு வரும்போது அதிமுக முன்னிலை என்று தகவல் வரும். நான்கு தொகுதியில் டெபாசிட் வாங்கவே மற்ற கட்சிகள் போராடி வருகிறது. ஸ்டாலினும், டிடிவி தினகரனும் வெற்றி பெற முடியாது. அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்தவர்கள் ஒரு அணியாகவும், உதயநிதி ஸ்டாலின் ஒரு அணியாகவும் திமுக இரண்டாக உடையப்போகிறது. 23ஆம் தேதிக்கு பிறகு திமுக இரண்டாக உடையப்போகிறது. திமுகவில் இருக்கும் நல்லவர்களெல்லாம் வெளியேறி போய்விடுவார்கள். அல்லது எங்களிடம் வந்துவிடுவார்கள் என்றார்.
Follow Us